'பாண்டிய நாடு' படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கியிருக்கிறது சென்சார் மறுஆய்வுக் குழு.
தீபாவளிக்கு வெளியாக இருக்கும் 'ஆரம்பம்', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' ஆகியவற்றுக்கு 'யூ' சான்றிதழ் அளித்தனர் சென்சார் அதிகாரிகள். 'பாண்டிய நாடு' படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கினார்கள். இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்தது.
'U/A' சான்றிதழ் என்றால் அரசாங்கத்திடம் வரிச்சலுகை கிடைக்காது. இதனால் படத்தினை சென்சார் மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பினார்கள்.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், சீக்கிரம் படத்திற்கு 'யூ' சான்றிதழ் வாங்கிவிட வேண்டும் என்ற முடிவில் படக்குழு பணியாற்றி வந்தது.
இந்நிலையில் படத்தினைப் பார்த்த சென்சார் மறுஆய்வுக் குழு 'யூ' சான்றிதழ் வழங்கியது. இதனால் படு உற்சாகமாக பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்கள். படத்தினை நவம்பர் 2ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
படப்பணிகள் முடிந்து வரிச்சலுகை அதிகாரிகளுக்கும் திரையிட முடிவு செய்திருக்கிறார்கள்.