'நெஞ்சம் மறப்பதில்லை' மற்றும் 'இவன் தந்திரன்' ஆகிய இரண்டு படங்களும் தங்களுடைய வெளியீட்டை ஜூன் 30-ம் தேதிக்கு உறுதிப்படுத்தியுள்ளன.
கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ஷரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'இவன் தந்திரன்'. இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்தது. ஆனால் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தார்கள்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியிருக்கும் தனஞ்ஜெயன், ஜூன் 30-ம் தேதி வெளியிட்டால் சரியாக இருக்கும் என முடிவுசெய்து அறிவித்துள்ளார்.
மேலும், செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் அனைத்துப் பணிகளும் முடிந்து, நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. ஜூன் 23-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டு பின்வாங்கியது. தற்போது ஜூன் 30-ம் தேதி வெளியீடு சரியாக இருக்கும் என அறிவித்துள்ளது படக்குழு.