தமிழ் சினிமா

கடுகு பட விநியோக உரிமையை கைப்பற்றிய சூர்யா

ஸ்கிரீனன்

விஜய் மில்டனின் 'கடுகு' படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார் சூர்யா.

ராஜகுமாரன், பரத், சுபிக்‌ஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கடுகு'. விஜய் மில்டன் இயக்கி, தயாரித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வந்தது.

வெளியீட்டு உரிமையை கொடுப்பதற்காக பல்வேறு முன்னணி தயாரிப்பாளர்களுக்கு படத்தை திரையிட்டு காட்டி வந்தார் இயக்குநர் விஜய் மில்டன். இறுதியாக சூர்யாவின் '2டி' தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

மார்ச் முதல் வாரத்தில் படத்தை வெளியிடும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது.

SCROLL FOR NEXT