தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷின் செம பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஸ்கிரீனன்

புதுமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'செம' படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது.

பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், தற்போது பாலா இயக்கத்தில் உருவாகிவரும் 'நாச்சியார்' படத்தில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

வள்ளிகாந்தின் நண்பர் ஒருவர் திருமணம் செய்வதற்காக சந்தித்த நகைச்சுவையான அனுபவங்களை கதையாக உருவாக்கி பாண்டிராஜிடம் கூற அவருக்கு மிகவும் பிடித்துவிடவே இப்படத்தை தொடங்கியுள்ளார்கள்.

பசங்க புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார் பாண்டிராஜ். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடந்துவந்த இப்படத்துக்கு தற்போது 'செம' என தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அர்த்தனா, யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.

SCROLL FOR NEXT