தமிழ் சினிமா

இசை வெளியீடு மாதமான டிசம்பர்!

செய்திப்பிரிவு

டிசம்பரில் ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் இசை வெளியீடு நடைபெறவிருக்கிறது.

டிசம்பரில் மார்கழி இசை விழாக்கள் நடைபெறுவது வழக்கம். ’சென்னையில் திருவையாறு’ போன்ற முன்னணி இசை விழாக்கள் அனைத்துமே டிசம்பரில் தான் நடைபெறும்.

இந்த முறை டிசம்பரை திரைத்துறையினரும் திரையிசை மாதமாக்க உள்ளனர். டிசம்பர் மாதம் வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களின் இசை வெளியீடு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ரஜினியின் 'கோச்சடையான்' படத்தின் இசை டிசம்பர் 12, விஜய்யின் 'ஜில்லா' படத்தின் இசை டிசம்பர் 15, அஜித்தின் 'வீரம்' படத்தின் இசை டிசம்பர் 7 அல்லது டிசம்பர் 18 ஆகிய நாட்களில் வெளிவரவிருக்கிறது.

இவை தவிர, கமலின் 'விஸ்வரூபம் 2', சிம்புவின் 'வாலு', உதயநிதி ஸ்டாலினின் 'இது கதிர்வேலன் காதல்', சித்தார்த்தின் 'ஜிகர்தாண்டா' உள்ளிட்ட பல படங்களின் இசையையும் டிசம்பரில் வெளியிடலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT