தமிழ் சினிமா

விற்றுப் போன ஜில்லா!

ஸ்கிரீனன்

'ஜில்லா' படத்தின் முக்கிய விநியோக உரிமைகள் அனைத்துமே விற்று தீர்ந்தது.

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க, நேசன் இயக்கி வரும் படம் 'ஜில்லா'. இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார்.

பொங்கல் வெளியீடாக இருக்கும் என்று அறிவித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம், படத்தின் டிரெய்லர் மற்றும் இசையை டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் விநியோக உரிமையை கைப்பற்ற, விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவிவந்தது. விநியோக உரிமையை விற்க முன்வந்தார் ஆர்.பி.செளத்ரி.

அதன்படி, சென்னை உரிமையை தமீன்ஸ் பிலிம்ஸ், NSC உரிமையை யாஹாயா பாய் நிறுவனம், கோயம்புத்தூர் உரிமையை காஷ்மோ சிவா, திருச்சி உரிமையை பாஸ் பிலிம்ஸ் என வாங்கிவிட, அனைத்து ஏரியாக்களும் வியாபாரம் ஆரம்பித்த சில மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.

'ஜில்லா' படத்திற்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

SCROLL FOR NEXT