தமிழ் சினிமா

இது நம்ம ஆளு படக்குழுவினருக்கு சிம்பு நன்றி

ஸ்கிரீனன்

பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த 'இது நம்ம ஆளு' படக்குழுவினருக்கு சிம்பு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

சிம்பு, நயன்தாரா, சூரி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'இது நம்ம ஆளு'. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்த படத்துக்கு குறளரசன் இசையமைத்தார். டி.ராஜேந்தர் வழங்க முதல் பிரதி அடிப்படையில் பாண்டிராஜ் தயாரித்தார்.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம் மே 27ம் தேதி தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் வசூலில் குறை வைக்கவில்லை.

இப்படத்தில் நாயகனாக நடித்த சிம்பு, படக்குழுவினருக்கு தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார். "’இது நம்ம ஆளு’ படத்திற்கு கிடைத்த அருமையான வரவேற்புக்கும், வெற்றிக்கும் அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரையில் இது மிக முக்கியமானது. நீங்க இல்லாம நான் இல்ல. இதுக்குக் காரணமான ஒட்டுமொத்த அணிக்கும் எனது நன்றி.

பாண்டிராஜுக்கும் எனது நன்றி. அவரால்தான் இது சாத்தியமானது. ’இது நம்ம ஆளு’வின் ஒரு அங்கமாக விளங்கிய நயன்தாராவுக்கு நன்றி. அதேபோல் சூரியின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, ஆதரவுகளுக்கு நன்றி. தயாரிப்பாளர்களான எனது அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ், தியேட்டர்கள், விநியோகஸ்தர்கள், பத்திரிகைத் துறையினர் ஆகியோர் காட்டிய ஆதரவுகளுக்கு நன்றி. பத்திரிகையாளர்கள் இந்தப் படத்தின் வெற்றியில் பெரிய பங்காற்றியதற்காக நன்றியைப் பதிவு செய்கிறென்.

கடைசியாக எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் போதாதுதான்! எனது ரசிகர்கள் என் மீது காட்டிய அன்புக்கும் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.

மீண்டும் ஒரு முறை இயக்குநர் பாண்டிராஜுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எந்த இடத்திலும் துவண்டு விடாமல் செயலாக்கத்துடன் பணியாற்றிய அவருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் அன்புச் சகோதரனுக்கு நன்றி. கொடுத்த ரோலை ஏற்றுக் கொண்டு கிளாஸாக நடித்துக் கொடுத்த ஆண்ட்ரியாவுக்கு நன்றி.

தனது அதிரடி பெர்பாமன்சால் கலக்கிய ஆதா ஷர்மாவுக்கு சிறப்பு நன்றிகள். நான் யாரையாவது விட்டிருந்தால் மன்னிக்கவும். இந்த வெற்றி அனைவருக்கும் சொந்தமானது. எனது சகோதரன் குறளரசன் அருமையாக பணியாற்றியது எனக்கு இரட்டை மகிழ்ச்சி. இன்னும் அவர் நிறைய செல்ல வேண்டியுள்ளது அவரது வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சிம்பு.

SCROLL FOR NEXT