‘ஜில்லா’ படத்தின் கேரள உரிமையை வாங்கியிருக்கிறார் நடிகர் மோகன்லால்.
தமிழ் நடிகரின் படங்களுக்கு கேரளாவிலும் மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என்றால் அது விஜய்க்கு தான். தமிழ்நாட்டிற்கு நிகராக கேரளாவிலும் விஜய் ரசிகர் மன்றங்கள் செயலாற்றி வருகின்ன. 'தலைவா' படத்தின் முதல் நாள் கேரளா வசூல் அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக இருந்தது.
விஜய்யுடன் முதன் முறையாக மோகன்லால் இணைந்திருக்கும் படம் ’ஜில்லா'. நேசன் இயக்கிவரும் இப்படத்தினை ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார். படத்தினை பொங்கல் வெளியீடாக கொண்டுவர திட்டமிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் படத்தின் கேரளா உரிமையை மொத்தமாக ஆசிர்வாத் சினிமாஸ் வாங்கியிருக்கிறது. மோகன்லால் இந்நிறுவனத்தின் பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. கடும் போட்டிக்கு இடையே இந்நிறுவனம் படத்தின் உரிமையை கைப்பற்றி இருக்கிறது.
மோகன்லால் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் படத்தைப் பார்க்க முந்துவார்கள் என்பதால், இப்படத்திற்கு ஓப்பனிங் நிச்சயம் பிரமாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.