தமிழ் சினிமா

வீடியோவில் இருப்பது நானும் சிம்புவும் அல்ல: ஹர்ஷிகா காட்டம்

ஸ்கிரீனன்

சைமா முத்தக் காட்சி வீடியோவில் இருப்பது நானல்ல என்று கன்னட நடிகை ஹர்ஷிகா காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஓட்டல் அறைக்கு வெளியே நின்று, ஒரு இளைஞரும் யுவதியும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது. அதில் இருப்பது கன்னட நடிகை ஹர்ஷிகாவும், நடிகர் சிம்புவும்தான் என்று இணையத்தில் பகிரப்பட்டது.

அண்மையில் மலேசியாவில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் இருவரும் சந்தித்ததாகவும், அப்போதைய பரிச்சயத்தின் விளைவே ஹோட்டல் லாபியில் இருவரும் முத்தமிடும் வரை வந்துள்ளது என்றும் தகவல்கள் பரவின.

இது குறித்து சிம்பு கூறும்போது, "அந்த வீடியோவில் இருப்பது நானில்லை" என்று ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அந்த வீடியோ குறித்து ஹர்ஷிகா அளித்துள்ள விளக்கத்தில், "சைமா முத்தக் காட்சி வீடியோவில் இருப்பது நானல்ல என்று கூறிக் கொண்டே இருக்கிறேன். ஆனால், தொடர்ச்சியாக என்னை முன்னிலைப்படுத்தி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

வேலை வெட்டி இல்லாத நபர்கள்தான் நானும் சிம்புவும் இருந்த படத்தை வைத்துக் கொண்டு, அந்த வீடியோவை போலியாக தயார் செய்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு அந்த வீடியோவை பார்த்து, போலியாக தயார் செய்யப்பட்டது என்பதை தெரிந்துக் கொண்டேன்.

சில நபர்கள் அந்த வீடியோவை வைத்துக் கொண்டு வீண் விளம்பரம் தேட முயற்சிக்கிறார்கள். எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நான் இந்த மாதிரி முட்டாள் தனமான காரியங்களில் ஈடுபட மாட்டேன் என்பது தெரியும். ஆகையால் நான் கவலைப்படத் தேவையில்லை. வீடியோ பரவ ஆரம்பித்தவுடன் விசாரித்த நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT