அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவரும் 'இது வேதாளம் சொல்லும் கதை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
புதுமுக இயக்குநர் ரத்தீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் 'இது வேதாளம் சொல்லும் கதை'. அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
தற்போது இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அபய் தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரை வைத்து போட்டோஷுட் ஒன்றையும் படக்குழு முடித்துள்ளது.
விரைவில் ஹைதரபாத்தில் அபய் தியோல் நடிக்கவுள்ள காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.