2014ல் நடிகை சமீரா ரெட்டிக்கும் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வரும் ஆகாஷி வர்தே என்பவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.
'வாரணம் ஆயிரம்', 'அசல்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வரும் ஆகாஷி வர்தேவிற்கும், நடிகை சமீரா ரெட்டிக்கும் டிசம்பர் 14ம் தேதி மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.
ஆகாஷி வர்தே - சமீரா ரெட்டி இருவருமே சில வருடங்களாக காதலித்து வருகிறார்களாம். இறுதியாக நிச்சயதார்த்தம் செய்து இருக்கிறார்கள். 2014ல் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.
திருமணம் முடிந்த பிறகும், படங்களில் நாயகியாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி