தமிழ் சினிமா

நய்யாண்டி படக்குழு மீது நஸ்ரியா புகார்!

ஸ்கிரீனன்

'நய்யாண்டி' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது நடிகை நஸ்ரியா புகார் அளித்துள்ளார்.

'நேரம்', 'ராஜா ராணி' ஆகிய படங்களில் தனது சிரிப்பின் மூலம் ரசிகர்களை மயக்கினார் நஸ்ரியா. அப்படங்களைத் தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக 'நய்யாண்டி' படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் 11ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் 'நய்யாண்டி' படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் இயக்குநர் சற்குணம் ஆகியோர் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் நஸ்ரியா.

அவர் அளித்துள்ள புகாரில், அவர் நடிக்க மறுத்த இடுப்பை அணைக்கும் காட்சி ஒன்றை தனது அனுமதியின்றி வேறு ஒரு பெண்ணை வைத்து படமாக்கி அதனை இவரது முகத்துடன் இணைத்து போஸ்டர்களில் பயன்படுத்தி தன்னை தவறாக சித்தரித்து விட்டதாக கூறியுள்ளார்.

இது தன்னிடம் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு முரணானது என்று தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT