தமிழ் சினிமா

நடிகை ஷெர்லி தாஸை மணந்தார் இயக்குநர் வேலு பிரபாகரன்

செய்திப்பிரிவு

இயக்குநர் வேலு பிரபாகரன் இன்று (சனிக்கிழமை) நடிகை ஷெர்லி தாஸை மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டார்.

சென்னை லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் 'ஒரு இயக்குநரின் காதல் டைரி' படத்தை பத்திரிகையாளர்களுக்குத் திரையிட்டார் இயக்குநர் வேலு பிரபாகரன். அதற்குப் பிறகு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி ஷெர்லி தாஸை திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து பதிவுத் திருமணம் செய்வதாகவும் அறிவித்தார்.

1989-ல் வெளியான த்ரில்லர் படமான 'நாளைய மனிதன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வேலு பிரபாகரன், 'அதிசய மனிதன்', 'அசுரன்' உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

வேலு பிரபாகரனின் இயக்கத்தில் வெளியான 'ஒரு இயக்குநரின் காதல் டைரி' படம் ஆபாசக் காட்சிகள் மிகுந்தது என சொல்லப்பட்டதால் சர்ச்சைக்குள்ளானது.

இவர் இயக்கிய 'காதல் கதை' படத்தில் நடித்தவர்தான் ஷெர்லி தாஸ். ஷெர்லியும் வேலு பிரபாகரனும் கடந்த 13 வருடங்களாக நண்பர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT