குடல்வால் அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருப்பதாக நடிகை ஸ்ருதிஹாசன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுனுடன் நடித்து வரும் 'ரேஸ் குர்ரம்' படப்பிடிப்பிலும், ராம் சரணுடன் நடித்த 'யாவடு' படத்தினை விளம்பரப்படுத்துவதிலும் மும்முரமாக ஈடுபட்டு வந்தார் ஸ்ருதிஹாசன்.
திடீரென வயிறு வலி காரணமாக, ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். ஸ்ருதிஹாசனுக்கு என்ன பிரச்சினை என்பதை யாருக்குமே தெரியாமல் ரகசியம் காத்தார்கள்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் " உங்களது அன்பிற்கும், உடல்நலம் பெற வேண்டி குவிந்த வாழ்த்துகளுக்கும் நன்றி. குடல்வால் சிகிச்சை முடிந்து நலமாக இருக்கிறேன்." என்று ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.