தமிழ் சினிமா

இந்த ஆண்டின் இறுதிக்குள் விஸ்வரூபம் 2 வெளியாகும்: கமல்

ஸ்கிரீனன்

இந்த ஆண்டின் இறுதிக்குள் 'விஸ்வரூபம் 2' வெளியாகும் என கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

'விஸ்வரூபம் 2' படத்திற்கான பணிகளை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தாமதப்படுத்தியதால், 'உத்தம வில்லன்', 'பாபநாசம்' ஆகிய படங்களில் தொடர்ச்சியாக கமல் நடித்து வந்தார். 'உத்தம வில்லன்', 'பாபநாசம்', 'தூங்காவனம்' என கமல் நடிப்பில் உருவான படங்கள் வெளியாகிவிட்டன. ஆனால் 'விஸ்வரூபம் 2' வெளியீடு எப்போது என்ற கேள்வி எழுந்தது.

தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் முடிக்க வேண்டிய பணிகள் அனைத்தையும் தொடங்கியுள்ளது படக்குழு. இதனால் இந்தாண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், கமல் எந்ததொரு தகவலையும் வெளியிடாமல் இருந்தார்.

இந்நிலையில் கமல் "ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு, 2017-ம் ஆண்டுக்குள் 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தை வெளிக்கொண்டுவருவதற்கான பொறுப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஏற்றுள்ளது.

’விஸ்வரூபம் 2’ திரைப்படத்தை நீங்கள் இனி பார்க்கமுடியும். அரசியல் குறுக்கீடுகள் இருந்தபோதிலும் நான் தொடர்ந்து போராடினேன். அதுவும் நல்ல அனுபவம்தான்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

SCROLL FOR NEXT