தமிழ் சினிமா

பொங்கல் ரேஸில் வெற்றி: சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன்

ஸ்கிரீனன்

பொங்கல் அன்று தொலைக்காட்சிகளில் திரையிடப்பட்ட படங்களில் சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு அதிகமான டி.ஆர்.பி கிடைத்திருக்கிறது.

பொங்கலன்று திரையரங்கில் வெற்றி யாருக்கு என்று அஜித் - விஜய் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். வழக்கம் போல சன், கலைஞர், ராஜ், விஜய், ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் அவர்கள் வாங்கி வைத்திருந்த புதுப்படங்களைத் திரையிட்டனர்.

'தலைவா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ராஜா ராணி', 'பாண்டிய நாடு', 'அலெக்ஸ் பாண்டியன்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'தேசிங்கு ராஜா' உள்ளிட்ட பல படங்கள் பொங்கல் விடுமுறைக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

அப்படங்களுள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு மிக அதிகமாக (12.29) டி.ஆர்.பி கிடைத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து 'தலைவா' 11.39, 'அலெக்ஸ் பாண்டியன்' - 8.67, 'ராஜா ராணி' - 7.36, 'பாண்டிய நாடு' - 3.76, 'தேசிங்கு ராஜா' - 3.66, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' - 3.34 டி.ஆர்.பி பெற்றிருந்தன.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' தியேட்டர்களில் வசூலைக் குவித்தது மட்டுமன்றி, தொலைக்காட்சியிலும் சிவகார்த்திகேயனை முன்னணியில் கொண்டு வந்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் 'மான் கராத்தே' படமும் விநியோகஸ்தர்கள், மக்கள், திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு உண்டாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT