இசையமைப்பாளர் இளையராஜா உடல்நலம் தேறி, இன்னும் ஆயிரம் பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து விருப்பம் தெரிவித்தார்.
இயக்குனர் சாமியின் 'கங்காரு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, "இன்று உலகத் தமிழர்கள் இதயங்களை எல்லாம் தன் இசையால் ஆண்ட இளையராஜா மருத்துவமனையில் இருக்கிறார்.
கிராமிய இசையை வெள்ளை மாளிகைக்கும் கேட்கும்படி செய்த அவர் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாக திரும்ப வேண்டும். இன்னும் ஆயிரம் பாடல்களுக்கு அவர் இசையமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார்.
பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘கங்காரு’ பாடல்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட வைரமுத்து பெற்றுக் கொண்டார்.
செய்தியாளர்கள் கூட்டத்தில் 'கங்காரு' படத்தின் சி.டியை சீமான் வெளியிட வைரமுத்து பெற்றுக் கொண்டார்.