தமிழ் திரையுலகில் வித்தியாச மான பெயர்களை கொண்டு படங்கள் வருவது சமீப காலமாக அதிகரித்து இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஒன்று ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’. படத்தின் பெயரே ஏடாகூடமாக இருக்கிறதே என்று அதன் இயக்குநர் விஜய குமார் மற்றும் தயாரிப்பாளர் நிர்மல் ஆகியோரைக் கேட்டோம்.
“ஏடாகூடமா வச்சாலும் அந்த தலைப்பே பெரியளவிற்கு ரீச்சா யிருச்சி. வடசென்னையில் நடக்கும் குத்து சண்டையை மையமாகக் கொண்ட படம் இது. அனாதையாக இருக்கும் ஹீரோ, அங்கிருக்கும் சில ரவுடிகளைப் பார்த்து அவர்களைப்போல் ஆக தானும் குத்துசண்டை கத்துக்கணும்னு ஆசைப்படுறான். அதுக்காக
ஒரு மாஸ்டர்கிட்ட சேர்ந்துடறான். ஆனால் மாஸ்டர் பாக்ஸிங் ரவுடிஸி சத்துக்கு பயன்படக்கூடாது, பல நல்ல விஷயங்களுக்கு பயன்படணும்னு நினைக்கிற ஆளு. இக்கட்டான சூழ்நிலையில மாஸ்டரை ஹீரோ காப்பாத்துறான். அதுக்குப்புறம் என்ன நடக்குதுங்கிறதுதான் கதை.
எண்ணூர், திருவொற்றியூர் சுற்றியிருக்க பகுதிகள்ல 47 நாள்ல மொத்த ஷுட்டிங்கையும் முடிச் சுட்டேன். பாடல் காட்சிகளுக்கு கூட நாங்க சென்னைக்குள்ள வரல. ஒரு எதார்த்தம் இருக்கணும்னு மொத்தத்தையும் நார்த் மெட்ராஸ்ல எடுத்துருக்கேன். இது தான் ஏடாகூடம் உருவான கதை” என்றார்கள் இருவரும்.