‘கோச்சடையான்’ இசை வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கலந்துகொள்கிறார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, தீபிகா படுகோனே உள்ளிட்டவர்கள் நடிப்பில் தயாராகி வரும் ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9-ம் தேதி நடக்கிறது.
இந்த விழாவில் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்வதாக இருந்தது. தற்போது அவர் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொள்கிறார். இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் தளத்தில் ஷாரூக்கான் குறிப்பிட்டுள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில் ஷாரூக்கான் கலந்துகொள்ளும் தகவலை ‘கோச்சடையான்’ படத்தின் இயக்குநரும், ரஜினிகாந்தின் இளைய மகளுமான சௌந்தர்யா உறுதிப்படுத்தியுள்ளார்