சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
'கெத்து' படத்தை அஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் 'மனிதன்' படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
'மனிதன்' படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிப்பதற்கு தேதிகள் ஒதுக்கினார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தில் உதயநிதி உடன் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பதற்கான தேர்வு நடைபெற்று வந்தது.
தற்போது அப்படத்தில் உதயநிதிக்கு நண்பராக விஷ்ணுவிஷால், நாயகியாக மஞ்சிமா மோகன் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் துவங்கும் என்று தெரிவித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.