தமிழ் சினிமா

இயக்குநர் ராஜூமுருகன் - ஹேமா சின்ஹா காதல் திருமணம்

ஸ்கிரீனன்

'குக்கூ' மற்றும் 'ஜோக்கர்' இயக்குநர் ராஜூமுருகன் - ஹேமா சின்ஹா காதல் திருமணம் சென்னையில் இன்று (செப்.4) நடைபெற்றது.

தினேஷ், மாளவிகா நடித்த 'குக்கூ' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் ராஜூமுருகன். அப்படத்தைத் தொடர்ந்து 'ஜோக்கர்' படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.

'ஜோக்கர்' படம் வெளியான சில நாட்களில் திருமணம் செய்யவிருப்பதாக இயக்குநர் ராஜூமுருகன் தெரிவித்திருந்தார்.

ராஜூமுருகனும், தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த ஹேமா சின்ஹாவும் காதலித்து வந்தனர். இவ்விருவரின் திருமணம் பெசன்ட் நகரில் உள்ள கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது. இருவரின் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

SCROLL FOR NEXT