தமிழ் சினிமா

ஒய்விற்கு தயாராகும் அஜித்!

ஸ்கிரீனன்

அஜித் காலில் ஏற்பட்ட காயத்திற்கு, அடுத்த மாதம் சென்னையில் அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது.

'ஆரம்பம்' படத்தில், கார் சேஸிங் காட்சியில் நடித்தபோது அஜித்திற்கு காலில் அடிப்பட்டது. அக்காட்சியில் டூப் போட்டுக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொண்ட போது அஜித் கேட்காமல், தாமாக முன்வந்து நடித்தார். அப்போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆனால், ஒய்வு எடுக்கச் சென்றால் படப்பிடிப்பு தாமதமாகும் என்ற காரணத்தால் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார். காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வந்தார்கள். 'ஆரம்பம்' படத்தினைத் தொடர்ந்து 'வீரம்' படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் 'வீரம்' படப்பிடிப்பும் முடியும் தருவாயில் இருப்பதால், அடுத்த மாதம் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.

அறுவை சிகிச்சை முடித்து இரண்டு மாதங்கள் ஒய்விற்கு பிறகு, பிப்ரவரி 15 முதல் கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

SCROLL FOR NEXT