தமிழ் சினிமா

ஜல்லிக்கட்டுப் போராட்டங்களுக்கு நடிகர் விஜய் ஆதரவு

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டுத் தடையை எதிர்த்தும், பீட்டா அமைப்பைத் தடைச் செய்யக் கோரியும் தமிழ்நாடு முழுதும் கடும் போராட்டங்கள் கிளம்பியுள்ள நிலையில் நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

உலகம் முழுதும் சட்டத்தை உருவாக்குவது மக்களின் கலாச்சாரத்தையும் உரிமையையும் பாதுகாக்கத்தான், அதை பறிப்பதற்கு இல்லை.

தமிழனோட அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் எதிர்பார்க்காமல், யாருடைய தூண்டுதலும் இல்லாமல், எந்த விதமான கட்சி பேதமுமின்றி தமிழ் என்ற ஒரே உணர்வோடு, இந்தப் போராட்டத்தில் குதித்திருக்கும் அத்தனை இளைஞர்களையும் நான் தலை வணங்குகிறேன்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தால் நான் மகிழ்ச்சியடைவேன், இவ்வளவுக்கும் காரணமான அமைப்பை வீட்டுக்கு அனுப்‘பீட்டா’ தமிழ்நாடே சந்தோஷப்படும்.

இவ்வாறு கூறியுள்ளார் விஜய்.

SCROLL FOR NEXT