தமிழ் சினிமா

வெற்றிமாறனை இந்தியில் அறிமுகம் செய்ய திட்டமிட்ட தனுஷ்

ஸ்கிரீனன்

மீண்டும் வெற்றிமாறன் - தனுஷ் இணைந்துள்ள படம், நேரடியாக இந்தியில் பண்ணலாம் என்று திட்டமிடப்பட்டு தற்போது தமிழில் இயக்கி வருகிறார்கள்.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்' உள்ளிட்ட படங்களின் கூட்டணி தனுஷ் - வெற்றிமாறன். இக்கூட்டணி இணைந்து 6 தேசிய விருதுகளை வென்று இருக்கிறது. இக்கூட்டணி மீண்டும் இணைந்து படம் பண்ண திட்டமிட்டார்கள்.

இருவரும் மீண்டும் இணையும் படத்தினை தயாரிக்க திட்டமிட்டார் தயாநிதி அழகிரி. ஆனால், அப்படத்தின் பணிகள் நீண்ட காலம் நடைபெற்று வந்தது. மறுபுறம் வெற்றிமாறன் தொடர்ச்சியாக படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் மார்ச் 7ம் தேதி தனுஷ், தனது ட்விட்டர் தளத்தில், "6 தேசிய விருதுகள் வென்ற குழுவோடு மீண்டும் படம் பண்ணுகிறேன். வெற்றிமாறன் இயக்கத்தில் நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. எனது வுண்டர்பார் நிறுவனமே தயாரிக்கிறது என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறியுள்ளார்.

இப்படம் குறித்து விசாரித்ததில், வெற்றிமாறன் கூறிய கதை தனுஷிற்கு மிகவும் பிடித்து விட்டதாம். இப்படத்தினை நேரடியாக இந்தியில் பண்ணலாம். நான் உங்களை இந்தியில் இயக்குநராக அறிமுகம் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார் தனுஷ்.

இந்தி படமாக இயக்கி, அதனை 'ராஞ்சனா' படத்தினைப் போலவே தமிழில் டப்பிங் செய்ய திட்டமிட்டார் தனுஷ். ஆனால், இறுதியில் வேண்டாம்.. தமிழிலேயே பண்ணலாம் என்று கூறிவிட்டார் தனுஷ். இந்திக்காக தயார் செய்த கதையில், தமிழுக்காக சிறு மாற்றங்கள் செய்து தற்போது படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT