'எங் மங் சங்' படத்தில் பிரபுதேவாவுக்கு நாயகியாக லட்சுமி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
''தேவி' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்காக பல்வேறு கதைகளைக் கேட்டுவந்தார் பிரபுதேவா. இதில் புதுமுக இயக்குநர் அர்ஜுன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே அதற்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
'யங் மங் சங்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தங்கர்பச்சான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி, 'பாகுபலி' பிரபாகர் கலக்கேயா, சித்ரா லட்சுமணன், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகிவுள்ளார்கள்.
இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். இப்படத்தின் நாயகியாக லட்சுமி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
குருதேவ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர் அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.