தமிழ் சினிமா

முண்டாசுப்பட்டி ராம் - விஷ்ணு விஷால் இணையும் மின்மினி

ஸ்கிரீனன்

'முண்டாசுப்பட்டி' ராம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் படத்துக்கு 'மின்மினி' எனப் பெயரிட்டுள்ளார்கள்.

'கதாநாயகன்', 'சிலுக்குவார்பட்டி' மற்றும் 'முண்டாசுப்பட்டி' ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இதில் 'முண்டாசுப்பட்டி' ராம் இயக்கி வரும் படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகும் கதையாகும்.

இன்னும் பெயரிடப்படாமல் இருந்த இப்படத்துக்கு 'மின்மினி' என பெயரிட்டுள்ளது படக்குழு. இறுதிகட்ட படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வரும் படக்குழு, விரைவில் டீஸர் ஒன்றையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

          
SCROLL FOR NEXT