தமிழ் சினிமா

என் ஹெச் 10 ரீமேக்கான கர்ஜனை படப்பிடிப்பு தொடங்கியது

ஸ்கிரீனன்

'என்.ஹெச் 10' படத்தின் தமிழ் ரீமேக்கான 'கர்ஜனை' படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்தியில் நவ்தீப் சிங் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான படம் 'என்.ஹெச் 10'. இப்படத்தை அனுராக் காஷ்யப், விகாஸ் பாகல், அனுஷ்கா சர்மா, சுனில் லுல்லா என 6 தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

2015-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் தமிழில் ரீமேக்காக இருக்கிறது. இப்படத்தில் அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தில த்ரிஷா நடிக்கிறார்.

அமித் பார்கவா, வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, ஸ்ரீரஞ்சனி, 'மதுரை' முத்து உள்ளிட்ட பலர் த்ரிஷாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். 'கர்ஜனை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். புதுமுக இயக்குநர் சுந்தர் இயக்கி வருகிறார்.

'கர்ஜனை' படத்தைத் தொடர்ந்து '96', 'சதுரங்க வேட்டை 2', 'மோகினி', '18:18' உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா.

SCROLL FOR NEXT