தமிழ் சினிமா

பிரபுதேவா - கார்த்திக் சுப்புராஜ் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு

ஸ்கிரீனன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவிருந்த படத்திற்கு முன்பாக, பிரபுதேவா நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. குறுகிய கால தயாரிப்பாக இருக்க வேண்டும் என தீர்மானித்து, சென்னை மற்றும் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்றது.

பிரபுதேவாவுடன் நடித்து வரும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட எந்தவொரு விவரத்தையும் படக்குழு அறிவிக்காமலே, மொத்த படப்பிடிப்பையும் முடித்து இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திரு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர விவரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT