விஷால் நடித்திருக்கும் 'கதகளி' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். பொங்கலுக்கு வெளியாகிறது.
விஷால், கேத்ரீன் தெரசா, நந்தகுமார் உள்ளிட்ட பலர் நடிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கதகளி'. பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க பாண்டிராஜ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார்.
பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் தமிழக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இறுதிகட்டப் பணிகள் முடிந்து சென்சாருக்கு பதிவு செய்திருந்தார்கள்.
ஏற்கனவே இப்படம் சென்சார் செய்யப்பட்டு விட்டதாகவும் படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்தது,
தற்போது இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இதனை இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.