நமது உணவில் இன்னும் அதிகமான உப்பைப் போட வேண்டிய நேரமிது என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்துள்ளார். சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
காலையிலிருந்து எம்.எல்.ஏக்களின் தொடர் அமளியால் சட்டப்பேரவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை சுற்றிலும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சித்தார்த், "ஜெயிலில் சசிகலாவுக்கு ஒரு லேப்டாப் கொடுங்கள். 4 ஆண்டுகளுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய கும்பலுக்கும் 4 ஆண்டுகளுக்குப் போக்குவரத்து செலவை மிச்சப்படுத்துங்கள். நமது உணவில் இன்னும் அதிகமான உப்பைப் போட வேண்டிய நேரமிது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.