தமிழ் சினிமா

இங்கிலாந்து ராணியுடன் சந்திப்பு: கமல் நெகிழ்ச்சி

ஸ்கிரீனன்

இங்கிலாந்து - இந்தியா' கலாச்சார சந்திப்பு நிகழ்வில், இங்கிலாந்து ராணியை சந்தித்த நிகழ்வு குறித்து கமல் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல். இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற 'இங்கிலாந்து - இந்தியா' கலாச்சார சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் கமல் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இங்கிலாந்து ராணியை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு குறித்து தன்னுடைய அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "ராணி ஆரோக்கியமாக காணப்பட்டார். அவரது இந்திய பயணத்தை ஆசையாக நினைவுகூர்ந்தார்.

எடின்பர்க்கின் டியூக்கும் நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருந்தார். அங்கு அதிக மக்கள் இருந்ததால் எங்கள் உரையாடல் சிறியதாகவே இருந்தது.ராணியின் இந்திய பயணத்தின் போது எனது படப்பிடிப்பு தளத்துக்கு வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அவர் வாழ்க்கையிலேயே அவர் பார்த்த முதல் படப்பிடிப்பு தளம் அதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் கமல்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கமல் தொடங்கிய 'மருதநாயகம்' படப்பிடிப்பை இங்கிலாந்து ராணி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT