ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'ஐ' படத்திற்காக 2 குரலில் டப்பிங் பேச இருக்கிறார் விக்ரம். முதல் குரல் டப்பிங் முடிவடைந்து விட்டது.
விக்ரம், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஷங்கர் இயக்கி வரும் பெரிய பட்ஜெட் திரைப்படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஆஸ்கர் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இன்னும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. அப்பாடலை ஏமி ஜாக்சனை கொண்டு அடுத்த மாதம் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தற்போது 'ஐ' படத்தின் டப்பிங் பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இரண்டு விதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார் விக்ரம். ஒரு பாத்திரத்திற்கான டப்பிங் முடித்துக் கொடுத்து விட்டாராம். அடுத்த பாத்திரத்திற்கான டப்பிங் அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தில் ஏமி ஜாசன், தியா என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 'ஐ' படத்தினை முடித்துக் கொடுத்துவிட்டு தான் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம் ஏமி.