தமிழ் சினிமா

மக்களிடையே பெரும் வரவேற்பு: மரகத நாணயம் படக்குழு மகிழ்ச்சி

ஸ்கிரீனன்

சரவண் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'மரகத நாணயம்' படத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

சரவண் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி, அருண்ராஜா காமராஜ், ஆனந்த்ராஜ், ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மரகத நாணயம்'. இதற்கு விமர்சகர்கள் மற்றும் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய அருண்ராஜா காமராஜ், "எந்த ஒரு நாயகனும், தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கு பெரிய ஸ்கோப் கொடுக்க மாட்டார்கள். ஆனால் ஆதி மற்ற கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களுக்கும் கதையில் பெரிய முக்கியத்துவத்தை கொடுத்தார். அது மிகப்பெரிய விஷயம்" என்றார்.

ஆதி பேசும் போது, "வழக்கமான ஒரு நாயகன், நாயகி காதல், குத்துப்பாட்டு போல இல்லை இந்த படம். ஒரு வித்தியாசமான முயற்சி. நான் இல்லாமல் கூட இந்த படம் சாத்தியமாகியிருக்கும், ஆனால் ராம்தாஸ், மற்ற கதாப்பாத்திரங்கள் இல்லாமல் இந்த படம் சாத்தியமே இல்லை. அது தான் எல்லா கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வைத்தது. மொத்த குழுவும் உண்மையாக உழைத்தது தான் வெற்றிக்கு முக்கிய காரணமும் கூட" என்றார்.

SCROLL FOR NEXT