தமிழ் சினிமா

சிம்புவின் புதிய பட கெட்டப் வெளியீடு

ஸ்கிரீனன்

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் 3 கெட்டப்களில், சிம்பு முதல் கெட்டப் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு நடிக்கவிருக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைக்க இருக்கிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்க இருக்கிறார்.

3 கெட்டப்களில் நடிக்கவிருக்கும் சிம்புவுக்கு ஜோடியாக 3 நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். சிம்புவுடன் நடிக்கவிருக்கும் நடிகைகள், நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை ஜூலை 2வது வாரத்தில் மைசூரில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

மேலும், யுவன் இசையில் இப்படத்தில் 9 பாடல்கள் இடம்பெற இருப்பதாகவும், ஒரு பாடல் பதிவு முடிவுற்றதாகவும் அறிவித்திருக்கிறார்கள். முதல் கெட்டப்பிற்காக சிம்பு, நீளமாக முடிவளர்த்து தயாராகி வருகிறார். அந்த கெட்டப்பை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்கு சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

SCROLL FOR NEXT