விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'வீரசிவாஜி' திரைப்படம் டிசம்பர் வெளியீட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
விக்ரம் பிரபு, ஷாம்லி, ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வீரசிவாஜி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் விநாயக் இயக்கியிருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார்.
புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தன. இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
தணிக்கை பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து செப்டம்பர் 23-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், தொடர்ச்சியாக படங்கள் வெளியாகி வருவதால் தற்போது இப்படத்தின் வெளியீடு தீபாவளி முடிந்தவுடன் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. நவம்பர் மாத வெளியீடாக திரைக்கு வரும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.