நடிகர் சிவகார்த்திகேயன் விபத்துக்குள்ளானதாக எழுந்த வதந்திக்கு, ட்விட்டரின் மூலம் சிவகார்த்திகேயனே பதிலளித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் விபத்தில் பலியானதாக திடீரென வதந்தி எழுந்தது. இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் இந்தச் செய்தியை உண்மையென நம்பி பகிர்ந்துவந்தனர். நடிகர் சிவகார்த்திகேயனே ட்விட்டரில் தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து ட்வீட் செய்ததால், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தனது ட்வீட்டில், தான் நார்வேயில் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக சென்றுள்ளதாகக் கூறியுள்ள சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத்தின் பாடலுக்கு திரையில் முடிந்த வரை நியாயம் செய்ய முயல்கிறேன் என்று, அனிருத் முகவரியையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன், தற்போது, 'எதிர் நீச்சல்' இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், 'காக்கிச் சட்டை' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பிற்காக அவர் நார்வே சென்றுள்ளார்.