தமிழ் சினிமா

பரத்பாலாவுக்கு டிக் அடித்த சிம்ஹா!

ஸ்கிரீனன்

'மரியான்' இயக்குநர் பரத்பாலா இயக்கவுள்ள அடுத்தப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிம்ஹா.

'ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் சிம்ஹா. அப்படத்தை தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும், எதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

நிதானமாக நிறைய கதைகளை கேட்டு வந்தார் சிம்ஹா. இறுதியாக இயக்குநர் பரத்பாலா இயக்கவிருக்கும் படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்து இருக்கிறார். அவரோடு யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மிகவும் நெருக்கமானவர் இயக்குநர் பரத்பாலா. 'மரியான்' பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும், தனுஷின் நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை போன்ற விஷயங்களில் அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'ஜிகர்தண்டா' முடித்துவிட்டு, நாயகனாக ஒப்பந்தமாகி நடித்து வந்த 'உறுமீன்' விரைவில் வெளியாக இருப்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT