தமிழ் சினிமா

பிரியதர்ஷன் படத்துக்கு ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ்

செய்திப்பிரிவு

இயக்குநர் பிரியதர்ஷன், ‘நிமிர்’ படத்தை அடுத்து மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ‘மரக்கார்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாள சினிமா உலகில் அதிக பட்ஜெட் படமாக இது எடுக்கப்படுகிறது. தமிழ். தெலுங்கில் பிஸியாகியுள்ள நடிகை கீர்த்தி சுரேஷை மலையாளத்தில் பிரியதர்ஷன் அறிமுகப்படுத்தினார். தற்போது கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. இந்நிலையில் மோகன்லால் நடிப்பில், தான் இயக்கும் ‘மரக்கார்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தன்னை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய குரு என்பதால் மறுப்பு சொல்லாமல் உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார் கீர்த்தி.

SCROLL FOR NEXT