தனது மகள் நடிக்க வந்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி நடிப்பில் 'சிந்துபாத்' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதில் அவருடன் அவரது மகன் சூர்யாவும் நடிக்கிறார். சூர்யா இதற்கு முன்னரே நானும் ரவுடி தான் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது விஜய் சேதுபதியின் மகளும் 'சங்கத்தமிழன்' மூலம் நடிக்க வந்துள்ளார். இது பற்றி இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் தந்துள்ளார் விஜய் சேதுபதி.
"‘சங்கத்தமிழன்’ படத்துல நடிக்கிறாங்க. அவங்க நடிக்க வந்ததுக்கும் ஒரு காரணம் இருக்கு. பையன் நடிக்கிறான். அது பெண் பிள்ளைக்கு தெரியும். பிஞ்சு மனசு. ஒரு தகப்பனாக அந்த குழந்தைக்கு ‘அண்ணன் நடிக்கிறான். நாம இல்லையே?’ன்னு அந்த ஏக்கம் இருந்துடங்கூடாதுன்னு தோணுச்சு. அதான் கேட்டேன். ஒரு வீட்டுக்குள்ள ஐந்தாறு குழந்தைங்க இருப்பாங்க. அந்த குழந்தைகளில் ஒருவராக என் மகளும் ‘சங் கத்தமிழன்’ படத்தில் நடிக்கிறாங்க" என்று விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் 'சங்கத்தமிழன்' படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இதில் இவருக்கு இரட்டை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது. ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.