தமிழ் சினிமா

முதலில் நாம் ஒழுக்கமாக இருந்து, பின் பதவிக்கு வரவேண்டும்: விஷாலை சாடிய அருண் பாண்டியன்

செய்திப்பிரிவு

முதலில் நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அதற்குப்பின் பதவிக்கு வரவேண்டும் என விஷாலை சாடியுள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன்.

சக்தி சிவன் இயக்கி, நடித்துள்ள படம் ‘தெளலத்’. ஜான்வி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, முகம்மது அலி தயாரித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன், “பெரிய ஹீரோக்கள் நடித்த படம் மட்டுமே பேசப்படும் சூழல் உள்ளது. சரியான கதையோடும் தரத்தோடும் நிறைய சின்னப்படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் வெளியில் வரவேண்டும்.

இந்தப் படத்தின் தலைப்பு ‘தெளலத்’. அப்படியென்றால் உருது மொழியில் செல்வம் என்று பொருள். இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்காமல் படத்தைப் பற்றிப் பேசக்கூடாது. ஆனால், நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

நடிகர் ஜீவா, நடிகர் சங்கத்தைப் பற்றி மறைமுகமாகச் சொன்னார். நான் நேரடியாகவே சொல்கிறேன். விஷாலைப் பற்றி எனக்கு இப்போதுதான் தெரியும். ‘அயோக்யா’ படத்தின் தயாரிப்பாளர், எனது நண்பர். அவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்தேன். முதலில் நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அதற்குப்பின் பதவிக்கு வரவேண்டும். இங்கு தயாரிப்பாளரைப் பிடிப்பது முக்கியமல்ல. தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியம்” என விஷாலை சாடி பேசினார்.

SCROLL FOR NEXT