500 மில்லியன் பார்வைகளை கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது 'ரவுடி பேபி' பாடல்
தமிழ்த் திரையுலகில் 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் செய்த யூ ட்யூப் சாதனைகள் அனைத்தையுமே 'ரவுடி பேபி' பாடல் முறியடித்தது. மேலும், தென்னிந்தியத் திரையுலகில் அதிக பார்வைகள் கொண்ட பாடல் என்ற சாதனையையும் நிகழ்த்தியது.
'மாரி 2' படத்தில் இடம்பெற்ற அப்பாடலில், தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடனமாடியுள்ளனர். இதன், வீடியோ அப்பாடலுக்கு பிரபுதேவா நடனமைத்தார். சமூக வலைதளங்களில் பலரும் நடனத்துக்குப் பெரும் வரவேற்பு கொடுத்தனர்.
டிசம்பர் மாத இறுதியில் 'மாரி 2' வெளியானாலும், ஜனவரி 2-ம் தேதி தான் யூ-டியூப் பக்கத்தில் 'ரவுடி பேபி' பாடல் வீடியோ வடிவில் பதிவேற்றப்பட்டது. அன்றைய தினத்திலிருந்தே வைரலாக பரவத் தொடங்கியது.
இந்நிலையில், தற்போது 500 மில்லியன் பார்வைகளைக் கடந்தியிருக்கிறது 'ரவுடி பேபி' பாடல். இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தென்னிந்திய திரையுலகிலிருந்து 500 மில்லியன் பார்வைகளைக் கடந்த முதல் பாடல் இதுவாகும்.