தமிழ் சினிமா

ஜூன் 21-ம் தேதி வெளியாகிறது சிந்துபாத்

ஸ்கிரீனன்

அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'சிந்துபாத்', ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.

அருண் குமார் - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக ‘சிந்துபாத்’ படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார். தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து, மே 16-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

பல்வேறு காரணங்களால் அந்தத் தேதியில் 'சிந்துபாத்' வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து வெளியிடப்பட்ட 'ராக்ஸ்டார் ராபர்' வீடியோ பாடல் இணையத்தில் பெரும் வரவேற்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT