தமிழ் சினிமா

நடிகர் சங்கத்தின் சண்டைகளை சீரியஸாக எடுக்காதீர்கள்: அம்பிகா, ராதா

ஸ்கிரீனன்

நடிகர் சங்கத்தின் சண்டைகளை சீரியஸாக எடுக்காதீர்கள் என்று அம்பிகா மற்றும் ராதா கூட்டாகப் பேட்டியளித்தனர்.

2019-2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் கடும் பாதுகாப்புடன் தொடங்கியது. பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில் வாக்களித்துவிட்டு நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், “எங்களுடைய நண்பர்கள் அனைவருமே வாக்களிக்க வருவார்கள். எங்கள் குடும்ப நண்பர்கள் யார் ஜெயித்தாலும் எங்களுக்கு ஓ.கே. தான். என் குழந்தைகள் கார்த்திகா, துளசி இருவருக்குமே தபால் ஓட்டு கிடைக்காதது வருத்தமாகவுள்ளது. அது கிடைத்திருக்க வேண்டும். இன்னும் காத்திருக்கிறேன்.

ஒரு வீட்டுக்குள் பாத்திரங்கள் எல்லாம் கீழே போட்டால், சத்தம் வரத்தான் செய்யும். அதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். காலை உணவில் தொடங்கும் சண்டை, இரவு சாப்பாட்டின் போது முடிந்துவிடும். முன்பெல்லாம் நடிகர் சங்கத்தில் ஓட்டு இருக்கிறது என்றெல்லாம் தெரியாது. நடிகர் சங்கத்தில் பெரியவர்கள் இருப்பார்கள் என நினைப்போம்.

எங்கள் ஓட்டால் சினிமாவுக்கு நல்லது நடக்கிறது என்றால், அதை வீணாக்க விரும்பவில்லை. பெரியவர்கள், சிறியவர்கள் சண்டை போட்டாலும் அனைவரும் ஒரே இடத்தில் ஒற்றுமையாக இருப்போம்” என்று அம்பிகா மற்றும் ராதா தெரிவித்தார்கள்.

SCROLL FOR NEXT