தமிழ் சினிமா

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாண்டவர் அணி

செய்திப்பிரிவு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்காக தெர்தல் அறிக்கையை பாண்டவர் அணி வெளியிட்டுள்ளது

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடக்க உள்ளது. இதில், பாண்டவர் அணி சார்பில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரும், சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் இயக்குநர் பாக்யராஜ், ஐசரி கே.கணேஷ் உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அறிக் கையை பாண்டவர் அணி நேற்று (13.06.19) வெளி யிட்டுள்ளது.

‘‘திரைப்படம் வெளியாகும் போது, தேவையின்றி அப்படத்தின் நடிகர், நடிகைகளை பொருளாதார நிர்பந்தத்தில் சிக்கவைப்பதை தடுக்க சட்டரீதியான பாதுகாப்பு தரப்படும். இதற்கான புது சட்ட திட்டங்கள் வரையறுக்கப்படும். சங்க கட்டிடத்துக்காக முழு மூச் சாக செயல்பட்டதால் தற்காலிக மாக தடைபட்டிருந்த நாடக விழாக் கள், போட்டிகள், விருது நிகழ்ச்சி கள் ஆகியவை புதிய நடிகர் சங்க கட்டிடத்தில் நடத்தப்படும். தகுதியான பழம்பெரும் கலைஞர்களுக்கான பொற்கிழி யின் பணமதிப்பு உயர்த்தப் படும். ஆய்வாளர் குழு அமைத்து சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங் களின் உண்மையான வடிவம் மீண்டும் கொண்டுவரப்படும்’

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT