கவியரசர் கண்ணதாசனுக்கு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பாடல்கள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 232 நூல்கள் எனத் தமிழ் இலக்கியத்துக்கு மிகப்பெரிய பங்காற்றியுள்ளார்.
1927-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி கண்ணதாசன் பிறந்தார். இன்று அவருக்கு 93-வது பிறந்த நாள்.
இந்நிலையில், கண்ணதாசனுக்கு ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
“செப்பிடும் நற்றமிழை
செவிவழி எனக்கீந்த
செவிலித்தாய்
முத்தைய்ய மாமணி
பிந்தைய காலத்தில்
பாடவந்தோர் பற்றிய பாட்டை
பாட்டுடைத் தலைவன் எனினும்
கண்ணனுக்கு தாசன்
பிறந்து வந்து பாடியதால்
இறந்ததை மன்னித்து
இனியென்றும் இறவாதும்
புகழையும் தமிழையும்
போற்றிடும் தமிழ்”
எனக் கவிதை நடையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.