தமிழ் சினிமா

‘ஆடை’ படத்தில் விஜே ரம்யா

செய்திப்பிரிவு

அமலா பாலின் ‘ஆடை’ படத்தில், விஜே ரம்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘மேயாத மான்’ படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கியுள்ள படம் ‘ஆடை’. ஹீரோயினை மையப்படுத்திய இந்தக் கதையில், பிரதான பாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

படம் நேரடி ஒலிப்பதிவு என்பதால், இந்தப் படத்தில் டப்பிங் பணிகள் கிடையாது. இதனால், இறுதிக்கட்டப் பணிகள் விரைவாக முடிவடைந்தன. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில், விஜே ரம்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கேம் ஓவர்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT