தமிழ் சினிமா

ஜோதிகாவின் ‘ராட்சசி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

செய்திப்பிரிவு

ஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

‘காற்றின் மொழி’ படத்துக்குப் பிறகு ஜோதிகா நடித்த படம் ‘ராட்சசி’. அறிமுக இயக்குநர் கெளதம்ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி, விஜே அகல்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அரசுப்பள்ளி ஆசிரியையாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கோகுல் பெனோய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, பிலோமின் ராஜ் எடிட் செய்துள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ‘நீ என் நண்பனே’ எனத் தொடங்கும் பாடலை, சூர்யா - கார்த்தியின் சகோதரியான பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார். இந்தப் பாடலை யுகபாரதி எழுதியுள்ளார்.

‘ராட்சசி’ படத்தைத் தொடர்ந்து ‘ஜாக்பாட்’ என்ற படத்திலும் நடித்துள்ளார் ஜோதிகா.

SCROLL FOR NEXT