தமிழ் சினிமா

யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

அபராசிதன்

இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவரும் இணைந்து ஒரு படத்துக்கு இசையமைக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜாவின் ‘யு1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பேய்ப்பசி’. யுவனின் உறவினர் ஹரி பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், நமிதா மற்றும் அம்ரிதா ஐயர் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீநிவாஸ் கவிநாயகம் என்ற அறிமுக இயக்குநர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அவருடன் சேர்ந்து சந்தோஷ் நாராயணனும் சேர்ந்து இசையமைக்கிறார். இரண்டு பேரும் சேர்ந்திருப்பதால், இந்தப் படத்தின் இசைக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடுகிறார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT