விஜய் டிவி தொகுப்பாளரான ரக்ஷன், துல்கர் சல்மானுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘கலக்கப்போவது யாரு’. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் ரக்ஷன். இவர், துல்கர் சல்மான் நடித்துவரும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேசிங் பெரியசாமி இயக்கிவரும் இந்தப் படத்தில், ரிது வர்மா ஹீரோயினாக நடிக்கிறார்.
“நல்ல படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்த எனக்கு, அதன்படியே ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காமெடியாக மட்டுமில்லாமல், சுவாரசியமாகவும் இருக்கும் வகையில் என்னுடைய கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய ஸ்டாரின் மகனாக இருந்தாலும், துளி கூட பந்தா இல்லாமல் பழகுகிறார் துல்கர் சல்மான்” என்கிறார் ரக்ஷன்.
‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் இன்னொரு தொகுப்பாளரான ஜாக்குலின், நயன்தாரா நடித்துவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்துள்ளார்.