பாடகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் பெண்கள் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சியில் முடிந்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சத்யராஜ் முக்கியபாத்திரத்தில் நடிக்கிறார். திரைப்பட வேலைநிறுத்த அறிவிப்பு முடிவுக்கு வந்ததும் ஒரே செட்யூலாக மற்ற பகுதிகளையும் படமாக்க வேண்டிய வேலைகளில் படக்குழு தயாராகஉள்ளது.